மேலும் செய்திகள்
பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'
04-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில், பரிசு விழுந்ததாக கூறி, வாலிபரிடம் 12 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மதன், 21; கடந்த ஜூன் 3ம் தேதி, இவரது மொபைல் போனில், மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, பிரபல நிறுவனத்தின் பெயரைக் கூறி குலுக்கலில், 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறினார். மேலும், பரிசு பணத்தைப்பெற ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம், புகைப்படம் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.இதனை நம்பிய மதன், மர்ம நபர் கூறிய வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பினார். தொடர்ந்து, அந்த நபர் கூறியபடி பரிசுத் தொகையைப் பெற முன் பணமாக 12 ஆயிரத்து 800 ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பி வைத்தார். ஆனால் பரிசு வழங்காததால் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் மதன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
04-Sep-2024