உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ்சில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரி,: தனியார் பஸ்சில் தவறவிட்ட 1 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். நல்லுார் முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மனைவிபூவரசி, 50. இவர் கடந்த 14ம் தேதி திருக்காஞ்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்ல ஒரு பையில் வீட்டு உபயோக பொருட்களையும், மற்றொரு பையில் மகளுக்கு நகை வாங்குவதற்காக 1 லட்சம் ரொக்கம் எடுத்து கொண்டு மதகடிப்பட்டில் இருந்து தனியார் பஸ்சில் சென்றார். பின், பஸ்சில் இருந்து வில்லியனுார், கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய பூவரசி, திருக்காஞ்சி செல்லும் டெம்போவில் ஏறி காசு கொடுக்க பையை தேடியுள்ளார். பணம் வைத்திருந்த பையை பஸ்சிலேயே தவறவிட்டு விட்டுகீழே இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து, உறவினர் உதவியுடன் அவர் வந்த தனியார் பஸ்சை பின் தொடர்ந்து சென்று,பழைய பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பஸ்சில் சோதனை செய்தபோது, பணப் பையை காணவில்லை. இதுகுறித்து பூவரசி அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார், பணப்பையை தவறவிட்ட பஸ்சில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பூவரசி இறங்கியவுடன் அதே சீட்டில் அமர்ந்த 2 பேர் பணப் பையை எடுத்துக் கொண்டு, புதிய பஸ் நிலையத்தில் இறங்குவதுதெரியவந்தது. அவர்களை கண்டுபிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை மீட்டனர். பின்,அவர்கள் தெரியாமல் எடுத்து விட்டதாக கூறியதால், போலீசார் எச்சரித்து அனுப்பினர். பணத்தை மீட்ட போலீசார், நேற்று திருக்கனுாரில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் போது, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., சுப்ரமணி ஆகியோர் முன்னிலையில் பூவரசி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பணத்தை மீட்டு கொடுத்த போலீசாரை டி.ஐ.ஜி., பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ