உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ்பவன் தொகுதியில் கொசு மருந்து தெளிக்க கோரிக்கை

ராஜ்பவன் தொகுதியில் கொசு மருந்து தெளிக்க கோரிக்கை

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார். இது குறித்து, அவர், புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவுவிடம் அளித்துள்ள மனு; ராஜ்பவன் தொகுதியில் அண்மைக் காலமாக கொகத் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளும் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ராஜ்பவன் தொகுதி முழுதும் அனைத்து வீடுகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் இடங்களில், கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இப்பணியை உரிய மேற்பார்வையுடன் மேற்கொண்டு, பொதுமக்களையும் குழந்தைகளையும் காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ