கழுத்தை அறுத்து தாய் கொலை.. சொத்து தகராறில் மகன் வெறிச்செயல் : புதுச்சேரியில் பயங்கரம்
புதுச்சேரி: புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, அன்னை நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ம னைவி லோகநாயகி, 70; கணவர் இறந்து விட்டதால், அவரது மகன்கள் ராஜ்குமார், 45; சந்தானம், 42; ஆகி யோருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக பிள்ளைச்சாவடியில் காலிமனை மற்றும் தவளக்குப்பத்தில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக, தாய் மகன்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மூத்த மகன் ராஜ்குமார், தாய் லோகநாயகியிடம், சொத்தை தனக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு லோகநாயகி மறுப்பு தெரிவித்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜ்கு மார், வீட்டில் இருந்த கத்தியால் லோகநாயகியின் கழுத்தை அறுத்துள்ளார். அதனை தடுக்க வந்த அவரது தம்பி சந்தானத்தை, ராஜ்குமாரின் 17 வயது மகன் கத்தியால் வெட்டினார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், லோகநாயகி ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே துடித்துடித்து இறந்தார். தகவலறிந்த காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று , லோகநாயகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தானம் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமார், 45; மற்றும் அவரது 17 வயது மகன் இருவரையும் நேற்று கைது செய்தனர். சொத்து தகராறில் தாயை, மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.