அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினம்
புதுச்சேரி: அன்னை மகா சமாதி தினத்தையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்பாஸா 1878 ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் இவரைக் கவர்ந்ததால் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே தங்கி அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். மேலும் அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை 1973ம் ஆண்டு நவ., 17ம் தேதி மகா சமாதி அடைந்தார்.நாளை அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினத்தையொட்டி புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் ஆசிரம வாசிகளின் கூட்டு தியான நிகழ்ச்சி காலையில் நடக்கிறது. தொடர்ந்து காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை அன்னை வாழ்ந்த அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.