உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாகன ஓட்டிகள் அட்டூழியம் ராஜிவ் சிக்னலில் விபத்து அபாயம்

வாகன ஓட்டிகள் அட்டூழியம் ராஜிவ் சிக்னலில் விபத்து அபாயம்

புதுச்சேரி: ராஜிவ் சிக்னல் நுாறடிச்சாலையில் பரலோகத்திற்கு வழிதேடி செல்லும் வாகன ஓட்டிகளால் தினசரி விபத்து ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரியில் 5 சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பு ராஜிவ் சிக்னல். இங்கு, டிராபிக் ஜாம் ஏற்படாத நாட்களே கிடையாது. இந்நிலையில், நுாறடிச்சாலையில் அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட் பாதையை பிரிக்க 100 மீட்டர் துாரத்திற்கு மீடியன் கட்டை அமைத்துள்ளனர். அதில் சில தடுப்பு கட்டைகள் மற்றும் பேரிகார்டுகளை சிலர் அகற்றி உள்ளனர்.சிக்னலில் இ.சி.ஆர்., நோக்கி செல்ல வெகு நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதிற்காக சில வாகன ஓட்டிகள் பிரிலெப்ட் பாதை வழியாக சென்று, தடுப்பு கட்டைகள் எடுக்கப்பட்ட வழியாக சாலையின் குறுக்கில் நுழைகின்றனர். வாகன ஓட்டிகளின் இச்செயல் பரலோகத்திற்கு நேரடியாக செல்ல வழி தேடுவதுபோல் உள்ளது.இப்பகுதி தடுப்பு கட்டை மீது மோதி கடந்த ஆண்டு நவ., மாதம் போலீஸ்காரர் அசோக்ராஜ், 43; உயிரிழந்தார்.பிரிலெப்ட் வழியாக வந்து இ.சி.ஆர்., செல்லும் பாதைக்குள் நுழைவதால் தினசரி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, பிரிலெப்ட் மீடியன் கட்டைகளை சரிசெய்வதுடன், மேலும் 100 மீட்டர் துாரத்திற்கு பிரிலெப்ட் கட்டைகளை நீட்டித்து அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ