உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் புற்றுநோய் நிறுவனம் ராஜ்யசபாவில் எம்.பி., கோரிக்கை

புதுச்சேரியில் புற்றுநோய் நிறுவனம் ராஜ்யசபாவில் எம்.பி., கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் புற்று நோய் நிறுவனம் அமைக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது, புதுச்சேரியில் புற்று நோய் நிறுவனம் அமைக்க வேண்டும் என செல்வகணபதி எம்.பி., கோரிக்கை வைத்தார். இக்கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு, நடப்பாண்டு 2025-26, மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்ட மருத்துவமனைகளில் பகல் நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களுடன் கலந்தாலோசித்து பகல் நேர பராமரிப்பு புற்றுநோய் மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2025--26ம் நிதியாண்டில், நாடு முழுதும் 200க்கும் மேற்பட்ட மையங்கள் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரியும் அடங்கும். மாநில புற்றுநோய் நிறுவனங்களுக்கு 120 கோடி வரை, மூன்றாம் நிலை புற்றுநோய் பராமரிப்பு மையங்களுக்கு ரூ. 45 கோடி வரையிலும் ஒரு முறை மானியமாக நிதி உதவி வழங்கப்படுகிறது. அதனால் புதுச்சேரிக்கு பிரத்தியேகமாக மாநில புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை