உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி.எல்., டி-20 கிரிக்கெட் 153 வீரர்கள் ஏலத்தில் தேர்வு

எம்.பி.எல்., டி-20 கிரிக்கெட் 153 வீரர்கள் ஏலத்தில் தேர்வு

புதுச்சேரி : மண்ணாடிப்பட்டு தொகுதியில், எம்.பி.எல்., டி-20, கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் பங்கேற்க, 153 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி கிராமப்புற இளைஞர்களின் திறமையை மேம்படுத்த, ஐ.பி.எல்., பாணியில், மண்ணாடிப்பட்டு தொகுதியை சார்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான, பிரிமீயர் லீக் எம்.பி.எல்., 'டி-20' போட்டி வரும், 2025ம் ஆண்டு ஜன.,12,ம் தேதி தேதி துவங்க உள்ளது. கிராமப்புற கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தின் தொலைநோக்கு சிந்தனையை கருத்தில் கொண்டு, பயன் அடையும் வகையில், இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் கெத்து காங்கேயன்ஸ், ஜல்லிக்கட்டு காளையன்ஸ், மின்னல் வீரர்கள், சங்கராபரணி கொம்பன்ஸ், தமிழ் தலைவாஸ், வேல்ஸ் வீரர்கள், வெற்றி தளபதிஸ், வெற்றி வீரன்ஸ் ஆகிய மொத்தம், 8 அணிகள் பங்கேற்க உள்ளன.இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான நிகழ்ச்சி, திருக்கனுார், விஜய் கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க மொத்தம், 350,க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம், 15 முதல் அதிக பட்சமாக, 22வீரர்கள் வரை, மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம், 153 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை