உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முகத்துவாரத்தை துார்வார அதிகாரிகளுக்கு உத்தரவு

முகத்துவாரத்தை துார்வார அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுச்சேரி: துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக துார் வார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தில் மணல் மேடுகள் சேர்ந்துள்ளதால், படகுகள் கடலுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், அதனால் துறைமுக முகத்துவாரத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற அமைச்சர், துறைமுகத்துறை இயக்குநர் மோகன்குமார் மற்றும் செயற்பொறியாளர் வைத்தியநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடித் தொழிலில் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தில் உடனே துார்வாரும் பணிகளை துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று முதல் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !