உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மா.கம்யூ., சைக்கிள் ஊர்வலம்

மா.கம்யூ., சைக்கிள் ஊர்வலம்

திருபுவனை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத புதுச்சேரி அரசைக் கண்டித்தும், மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மா.கம்யூ., சார்பில் சைக்கிள் பிரசார ஊர்வலம் நடந்தது.திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிகளில் நடந்த ஊர்வலத்திற்கு மா.கம்யூ., மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறப்பினர் ராஜாங்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.நிர்வாகிகள் முத்து, தட்சிணாமூர்த்தி, ரகுநாத், சிவசங்கரி, நாகராஜ் கந்தநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில், எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். திருபுவனை ஸ்பின்னிங் மில்லை திறந்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும. கிடப்பில் உள்ள சொல்லிப்பட்டு படுகை அணையை கட்டித்த தர வேண்டும். திருபுவனையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேம்பாலத்திற்கு வடக்கே சர்வீஸ் சாலையை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி