உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சில்மிஷ தம்பி கொலை; அண்ணன் வெறிச்செயல்

சில்மிஷ தம்பி கொலை; அண்ணன் வெறிச்செயல்

காரைக்கால்; மனைவியுடன் பழகியதால், தம்பியை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, காரைக்கால், கோவில்பத்து ஒமக்குளம் நரிக்குறவர் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி, 45; இவரது மகன் ராகுல், 23; தாய் உஷாவுடன் காரைக்கால் பீச்சில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார்.இவருக்கு, புதுச்சேரி, வில்லியனுார் அருகே ஒதியம்பட்டில் உள்ள பெரியம்மா மகன் கவுதம் என்பவரின் மனைவி சாரதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த கவுதம், தம்பி முறையான ராகுலை கண்டித்தார். ஆனாலும், பழக்கத்தை ராகுல் தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த கவுதம், ராகுலை கொல்ல திட்டமிட்டார். நேற்று அதிகாலை, 2:30 மணி அளவில், வீட்டின் பின்பக்கம் கட்டிலில் துாங்கிய ராகுலை, சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு கவுதம் உட்பட இருவர் தப்பினர். ரஜினி புகாரில், காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து கவுதம் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி