உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண்ணிடம் தாலி பறிப்பு மர்ம நபருக்கு வலை

 பெண்ணிடம் தாலி பறிப்பு மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி: வில்லியனுார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்த சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனுார், வெள்ளாழர் வீதியைச் சேர்ந்தவர் செல்வி, 56. இவர் கடந்த 25ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில், வீட்டிலிருந்து கிருஷ்ணா நகர் 2வது தெரு வழியாக வீட்டு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பியோடினார். செல்வி புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை