மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
19-Jul-2025
அரியாங்குப்பம் : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த செடல் விழாவில், பக்தர்கள் அலகு குத்தி பஸ், லாரிகளை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 42ம் ஆண்டு செடல் விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 11ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பல்வேறு வானங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. 14ம் தேதி பால்குடம் ஊர்வலம், 16ம் தேதி 108 முளைப்பாரி உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் மற்றும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான, செடல் உற்சவத்தையொட்டி நேற்று, பக்தர்கள் கோவில் அருகில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். மாலை 5:00 மணியளவில் நடந்த செடல் விழாவில், பக்தர்கள் அலகு குத்தி பஸ், லாரி, வேன், கார், ஆட்டோ ஆகிய வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். செடல் விழாவை முன்னிட்டு, நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு சென்ற வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
19-Jul-2025