நந்தா சரவணன் பிறந்த நாள் விழா ;10,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
புதுச்சேரி; முத்தியால்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன்பிறந்த நாள் விழாவை, தொகுதி மக்கள் உடன் இணைந்து முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி தி.மு.க., மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை யொட்டி, தொகுதியை சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பிறந்த நாள் விழாவில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவக்குமார்,மற்றும் மாநில தி.மு.க., நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், மாநில அணிகளின் அமைப்பாளர்கள், முத்தியால்பேட்டை தொகுதி நிர்வாகிகள் மற்றும்முத்தியால்பேட்டை தொகுதியில்உள்ள 26 வாக்குச்சாவடி கிளை கழக நிர்வாகிகள், தொகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா கொண்டாடிய முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முத்தியால்பேட்டை தொகுதிகளை சேர்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.