நாராயணசாமி போட்டியிட நெல்லித்தோப்பில் விருப்ப மனு
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முன்னாள் முதல்வர் நராராயணசாமி போட்டியிருகிறார்? வரும் 2026 சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி காங்., வேட்பளராக போட்டியிட வேண்டும் என்று நெல்லித்தோப்பு தொகுதி காங்., கமிட்டி நிர்வாகிகள், காங்., பொது செயலாளர் சுவாமிநாதனிடம் விருப்ப மனு வழங்கி, நெல்லித்தோப்பு தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும், அந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியில்,வட்டார காங்., தலைவர்கள் தாரகை ராஜா, சண்மும், மாநில காங்., கட்சி செயலாளர்கள் சம்பத்,முத்துக்குமாரசாமி, தொகுதி பொறுப்பாளர்கள் ரகுமான்,சரவணன், வட்டார காங்., நிர்வாகிகள் ஜெகஜோதி ,ஜெரால்டு அர்ஜூனன், பிரதாப் சண்முகம், செந்தில், அப்பு , கார்த்தி, கரீம் ரகுமான், மொசைனுல் அப்துல் ஆகியோர் கலந்து கொண்டனர்.