உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமரை சந்தித்து நிதி கேட்க வேண்டும் முதல்வருக்கு நாராயணசாமி அறிவுறுத்தல்

பிரதமரை சந்தித்து நிதி கேட்க வேண்டும் முதல்வருக்கு நாராயணசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற தவறி விட்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.புதுச்சேரி காங்., அலுவலகத்தில் நடந்த அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில், பங்கேற்ற அவர், பேசியதாவது:முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., கூட்டணி அரசு புயலை எதிர்கொள்ள தவறி விட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், ஒரு அதிகாரி கூட வரவில்லை; ஒருவேளை உணவு கூட வழங்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மழையால் பாதிக்கப்பட்ட ரெயின்போ நகருக்கு வந்த முதல்வர் காரை விட்டு கூட இறங்கவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எங்கு சென்றார்கள் என, தெரியவில்லை. முதல்வர் நிவாரணம் அறிவித்தால் போதுமா. அதற்கான நிதி எங்கிருக்கிறது. எப்போது நிவாரணம் தரப்போகிறார்.சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கடும் சேதம் அடைந்துள்ளன. மத்திய குழு வந்து ஆய்வு செய்து விட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். முதல்வர் ரங்கசாமி டில்லி சென்று பிரதமரை சந்தித்து நிதி கேட்க வேண்டும். ஆனால் அவர் கேட்க மாட்டார். முதல்வர் நாற்காலியில் மட்டும் அமர்ந்து கொண்டு, டில்லிக்கு செல்லாமல் மத்திய அரசு நிதி தரவில்லை என, கூறுவார். கோமாளி எம்.எல்.ஏ., ஒருவர் மழை பாதிப்பு வராமல் இருக்க, நாற்காலி உயரமாக போட்டு அமர்ந்து கொள்ளுங்கள் என்கிறார். ஒட்டு மொத்தமாக ஆட்சியாளர்கள் மக்களை காப்பாற்ற தவறி விட்டனர். இந்த பாதிப்பிற்கு முதல்வரும், அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை