உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரம் நாராயணசாமியும் விசாரிக்கப்படுவார் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

 போலி மருந்து விவகாரம் நாராயணசாமியும் விசாரிக்கப்படுவார் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி: போலி மருந்து வழக்கில் தேவைப்படும்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி விசாரிக்கப்படுவார் என, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். போலீஸ் துறை செயல் பாடுகள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோர் க லந்து கொண்டனர். பின், அமைச்சர் கூறியதாவது; மத்திய உள்துறை இணையமைச்சர், துணை ஜனாதிபதி ஆகியோர் புதுச்சேரி வர உள்ளனர். இதனால், பாதுகாப்பு குறித்தும், புத்தாண்டை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சட்டம் ஒழுங்கு போலீசார் 1,000 பேரும், போக்குவரத்தை சீரமைக்க 500 பேர் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகர எல்லைகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 300 அரசு பஸ்கள் மூலம் மக்கள் வர ஏற்பாடு செய்ய உள்ளோம். 'ஒயிட்' டவுனில் வாகனங்கள் செல்ல தடை செய்து, நடந்து செல்லும் நிலை உருவாக்கப்படும். சுமார் 8 இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு ஒருசில கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பாதுகாப்புகள் அந்த பகுதிகளில் வழங்கப்படும். ஜன. 2ம் தேதி 145 போலீஸ் பணிக்கும், 19ம் தேதி எ ஸ்.ஐ., பணிக்கும் உடற்தகுதி தேர்வு நடக்கவுள்ளது. இது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது. ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு குறித்த நீதிமன்ற வழக்கை தீர்வு காணப்பட்டு அவர்களுக்கான பயிற்சி விரைவில் துவங்கப்பட உள்ளது. போலி மருந்து வழக்கில், 16க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ., என்.ஐ.ஏ., விசாரணைக்கு கவர்னர் பரிந்துரைத்துள்ளார். விசாரணை அறிக்கையை அவர்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்ததே முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான். தேவைப்படும் போது, அவரையும் விசாரணைக்கு உட்படுத்துவோம். அரசை குறை சொல்வதே நாராயணசாமியின் வாடிக்கையாகிவிட்டது. பறவை காய்ச்சலை பொருத்தவரை நமது சுகாதரத்துறையின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த ஆசிரியர்களுக்கு தொடர்ந்து விளக்கம் அளித்துள்ளேன். இவர்களை பணியமர்த்தியது கடந்த ஆட்சியில். அவர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை கொடுத்து எங்கள் அரசு. அரசியல் செய்யவே நாராயணசாமி, சிவா உள்ளிட்டோர் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நிச்சயம் சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி