உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்

நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த நத்தமேடு முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது.உற்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு காலை அபிேஷக, ஆராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை செடல் உற்சவம் நடந்தது.திரளான பக்தர்கள் செடல் அணிந்த டிராக்டர், தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காலை காவடி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி