உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய தத்தெடுப்பு மாதம் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தேசிய தத்தெடுப்பு மாதம் கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரி தேசிய தத்தெடுப்பு மாதத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், கலந்துரையாடல் நடந்தது.காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பொறுப்பு இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.கலெக்டர் குலோத்தங்கன் விழாவை துவக்கி வைத்து பேசினார். வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தத்தெடுத்தல் மூலம் வயதான குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மத்திய தத்து வள ஆதார மையம் துணை இயக்குனர் ரிச்சா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரியா, தத்தெடுப்பு பற்றிய வழிமுறைகளை விளக்கினர். இதில், குழந்தைகளை தத்தெடுக்க போகும் பெற்றோர்கள், தத்தெடுத்த பெற்றோர்கள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர். ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை