உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய பீச் வாலிபால் போட்டி : புதுச்சேரி இறுதி போட்டிக்கு தகுதி

தேசிய பீச் வாலிபால் போட்டி : புதுச்சேரி இறுதி போட்டிக்கு தகுதி

புதுச்சேரி : தேசிய பீச் வாலிபால் போட்டியில், புதுச்சேரி மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு திருவிழா டாமன் டையூவில் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இவ்விழாவில் பீச் வாலிபால், பென்கா சிலாட் மற்றும் செபக் டக்ரா போட்டிகளில் புதுச்சேரி மாநிலம் சார்பில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் பீச் வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் அரை இறுதி போட்டியில், கேரள அணியை 21-14; 21-04 புள்ளிகளில் நேர் செட்டில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.இவர்கள், இன்று தமிழக அணியுடன் மோத உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை