மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
6 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
6 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
7 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
8 hour(s) ago
டாப்: புதுச்சேரி: புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை, புதுச்சேரி மாநில ரோட்டரி சங்கங்கள் மற்றும் மாநில என்.எஸ்.எஸ்., பிரிவு சார்பில், தேசிய கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஜோதி கண் மருத்துவமனை நிறுவனர் வனஜா வைத்தியநாதன் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன், ரோட்டரி மாவட்ட கவர்னர் வைத்தியநாதன் ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில், ரோட்டரியன் மணி, போக்குவரத்து எஸ்.பி., ரச்னா சிங், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ், ஜிப்மர் டாக்டர் சுபாஷினி, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை டாக்டர் தணிகாசலம், பிம்ஸ் டாக்டர் அமோத் ஹன்ஸ்டாக், இந்திய மருத்துவ சங்கச் செயலாளர் சீனிவாசன், என்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர் சதீஷ்குமார், வழக்கறிஞர் சிவகணபதி மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராஜா தியேட்டர் அருகே துவங்கிய ஊர்வலம், நேரு வீதி வழியாக சென்று, கடற்கரை சாலை காந்தி சிலை அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் புதுச்சேரியின் 32 ரோட்டரி சங்கங்களின் உறுப்பினர்கள், இந்திய மருத்துவச் சங்க மருத்துவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், என்.எஸ்.எஸ்., மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago