தேசிய கொடி ஊர்வலம்
புதுச்சேரி: உழவர்கரை மாவட்டம், பா.ஜ., சார்பில் இந்திய நாட்டின் முப்படைகளின் வீரத்தை போற்றும் வகையில், இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளில் தேசிய கொடியேந்தி வெற்றி ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில கல்வியாளர் பிரிவின் தலைவர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில், தேசிய மகளிரணி செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வி, விவசாய அணி மாநில செயலாளர் முத்து, மகளிரணி மாநில செயலாளர் கலைவாணி, வணிக பிரிவின் தலைவர் நமச்சிவாயம், மாவட்ட நிர்வாகிகள் நீலக்கண்டன், செல்வக்குமரன், தேவா, கதிர்காமம் தொகுதி தலைவர் தினேஷ், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் பண்னீர்செல்வம், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.