உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேசிய ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு 

 தேசிய ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு 

புதுச்சேரி: தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசு வென்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 18 முதல் 21ம் தேதி வரை, 33வது தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ரத்தன பாண்டியன் தலைமையில் சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். சிறுவர் அணியின் பயிற்சியாளர் மதன் கோபால், மேலாளராக ஆதி, சிறுமியர் அணியின் பயிற்சியாளர் ரத்தின பாண்டியன், மேலாளராக ஜெசிமால் ஆகியோர் புதுச்சேரி அணிகளை வழி நடத்தினர். அரை இறுதிப் போட்டியில், புதுச்சேரி சிறுமியர் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதின. இதில், தோல்வியுற்று நிலையில், புதுச்சேரி சிறுமியர் அணி மூன்றாம் பரிசை கைப்பற்றியது. பரிசு பெற்ற வீரர்களை, டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி செயலாளர் ரத்தன பாண்டியன் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ