மேலும் செய்திகள்
மாநில கராத்தே போட்டி: வீரர்களுக்கு பாராட்டு
13-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதுச்சேரி அஜன் ஸ்கான் கோஜி காய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே போட்டிகள் கவுண்டம்பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு மாநில மாணவ, மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்தினர். கராத்தே போட்டிகள் கட்டா மற்றும் குமித்தே ஆகிய பிரிவுகளில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், பா.ஜ., பொருளாதார பிரிவு தலைவர் சுரேஷ் கண்ணா, புதுச்சேரி ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் வளவன், சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணி, முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி தலைமை நிர்வாகி சுந்தர்ராஜன், அருணை ஆங்கில மேல்நிலைப் பள்ளி முதல்வர் சந்தனம், சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சம்பத், எஸ்.கே.வி.,பில்டர்ஸ் விக்னேஷ், கராத்தே வி.ஆர்.எஸ்., குமார், கிருஷ்ணன், இளையராஜா, அஜன் ஸ்கான் கோஜிகாய் கராத்தே பள்ளி தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகப்பன், தலைமை பயிற்சியாளர் குமரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினர். மாணவர்கள் சாய் பிரதீஷ், ஸ்ரீராம் ஆகியோருக்கு பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. நடுவர்கள் ராஜேஷ், முருகன், ராமராஜா, கஜலட்சுமி, மேரி கிளாரா, ஏழுமலை, மதன்ராஜ், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
13-Oct-2026