உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

புதுச்சேரி: விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனுாரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் தடய அறிவியல் பிரிவு சார்பில், தேசிய அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கு நடந்தது.பல்கலைக் கழகத்தின் வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரியின் டீன் செந்தில்குமார் வரவேற்றார்.தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற உதவி தலைவர்கள் பாரி, ஜேம்ஸ் அந்தோணி ராஜ், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசு, சென்னை பல்கலைக்கழக சைபர் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையத்தின் பேராசிரியர் மாரிமுத்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரி உயிரியல் துறை தலைவர் தியாகராஜன், பையணியர் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு தடயவியல் மருத்துவ நிபுணர் சரண்யா ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தடய அறிவியல் பிரிவு மாணவர்கள் கல்லுாரிக்கு மென்பொருள் தொடுத்திரையை அன்பளிப்பாக வழங்கினர்.ஏற்பாடுகளை கல்லுாரியின் தடய அறிவியல் பிரிவு பொறுப்பாளர் மோகன் மற்றும் உதவி பேராசிரியர்கள் ராஜஸ்ரீ சில்பா அமிதா, புவனேசன், லின்சி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை