மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
திருக்கனுார்; திருக்கனுார் போலீஸ் சார்பில் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரியில் போலீஸ் தரத்தை மேம்படுத்தும் வகையில், 'தேசிய ஒருமைப்பாடு' தலைப்பில் பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு போட்டிகள் நடத்த டி.ஜி.பி., உத்தரவிட்டார்.அதன்படி, திருக்கனுார் போலீஸ் சார்பில் கூனிச்சம்பட்டு, திருக்கனுார், மணவெளி, சோரப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே தேசிய ஒருமைப்பாடு தலைப்பில் பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில் திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா வரவேற்றார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, பள்ளிகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
28-Mar-2025