வக்பு சட்டத்தை திரும்ப பெற நாஜிம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் நாஜிம் எம்.எல்.ஏ., பேசியதாவது: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வக்பு சட்ட திருத்த முன் வடிவிற்கு நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக சட்டசபையில் கூட அந்த சட்ட வடிவினை திரும்ப பெற ஒருமனதாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல் வக்பு சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.