உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை ராணுவ வீரர்களுக்கு சலுகைகள் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

துணை ராணுவ வீரர்களுக்கு சலுகைகள் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:ஓய்வு பெற்ற எல்லை காவல் படைபிரிவினருக்கு சலுகைகளை வழங்க அறிவுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதை ஏற்று நம் மாநில அரசும் பதில் கடிதம் அனுப்பி சலுகைள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களுக்கான சலுகைகளை வழங்காமல் உள்ளது.ஓய்வு பெற்ற துணை ராணுவ படையினர் அதாவது எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தோ திபெத் காவல்படை, எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் படை ஆகிய படை வீரர்களையும், மத்திய ராணுவ படை வீரர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என மத்திய கேபினட் பாதுகாப்பு குழு ஒப்புதல் அளித்தது.அதன் அடிப்படையில் அனைத்து பிரிவினரையும் சமமமாக பாவித்து கோவா மாநிலம், டையு டாமன் மற்றும் தாதர் நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் அரசுகள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் துணை ராணுவ படை வீரர்களுக்கும் சலுகைகள் வழங்குவதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல் உயர்நீதிமன்றமும் ஓய்வு பெற்ற ராணுவ படை வீரர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது போன்று ஓய்வு பெற்ற துணை ராணு படையினருக்கு சலுகைகள் வழங்க வலியுறுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து துணை ராணுவ பிரிவினர்களுக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகைகள் வழங்குவது போல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணை ராணுவ படையினர் போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பிள்ளைகளுக்கு வீட்டு மனை மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களிலும் பல அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகும் பின்வாசல் வழியாக சேவை செய்து வருகின்றனர். இந்த முறையை அரசு கைவிட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ