உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய பஸ் நிலைய கழிவுநீர் செல்லும் வழிகளை நேரு எம்.எல்.ஏ., ஆய்வு

புதிய பஸ் நிலைய கழிவுநீர் செல்லும் வழிகளை நேரு எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி சுப்பையா நகர், மங்கலட்சுமி நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தின் கழிவுநீரை வெளியேற்ற ஸ்மார்ட் சிட்டி மற்றும் புதுச்சேரி நகராட்சி மூலம் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.சுப்பையா நகர், மங்கலட்சுமி நகர், கண்ணன் நகர், சஞ்சய்காந்தி நகர், அய்யனார் நகர் போன்ற பகுதிகளில் அடிக்கடி பாதாள கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீதிகளில் கழிவுநீர் வெளியேறி வருவது தொடர்கதையாக உள்ளது.ஆகையால், புதிய பஸ் நிலையத்தின் கழிவுநீரை வேறு மாற்று வழியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.இதில், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் வைத்தியநாதன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !