நெல்லித்தோப்பு சாலை விரிவாக்கம்: அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மனு
புதுச்சேரி: நெல்லித்தோப்பு சிக்னல் முதல் புவன்கரே வீதி சாலை விரிவாக்க பணியை விரைந்து மேற்கொள்ள அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், கோரிக்கை விடுத்துள்ளார். அவர், அைமச்சர் லட்சுமிநாராயணனுக்கு அனுப்பியுள்ள மனு; நெல்லிதோப்பு சிக்னல் முதல் புவன்கரே வீதி வரை குறுகலாக உள்ள சாலையை விரிவுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2015ம் ஆண்டு ஹட்கோ உதவியுடன் ரூ.15 கோடி மதிப்பில் துவங்கிய சாலை விரிவாக்க பணி, ஆட்சி மாற்றத்தால் நிறுத்தப்பட்டது. நெல்லித்தோப்பு சிக்னல் முதல் புவன்கரே வீதி வரை இரு புறமும் 11 மீட்டர் அகலப்படுத்தப்பட வேண்டிய இந்த சாலை பணி தற்போது வரை கிடப்பில் உள்ளது. மாநிலத்தில் அரசின் நில மதிப்பீடு உயர்ந்ததன் காரணமாக 20 கோடி மதிப்பில் தற்போது இப்பணி மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.நகரின் முக்கிய சாலையான நெல்லித்தோப்பு சிக்னல் முதல் புவன்கரே வீதி வரையிலான சாலை விரிவாக்க பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.