மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து தொழிலாளி பலி
13-Jun-2025
அரியாங்குப்பம்: வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஆலயமணி, இவரை, கடந்த 2002ம் ஆண்டு, வீராம்பட்டினத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் கத்தியால் வெட்டினார். இவ்வழக்கில் நடராஜன் உட்பட 14 பேர் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.சிறையில் இருந்து ஜாமீன் வெளியில் வந்த 13 பேரை புதுச்சேரி நீதிமன்றம், கடந்த 2009ம் ஆண்டு விடுவித்தது. இந்த வழக்கில், நடராஜன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்து வந்தார். அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.இந்நிலையில், கடந்த 16 ஆண்டுகள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளி நடராஜனை பிடிக்க கோர்ட் மீண்டும் உத்தரவிட்டதை அடுத்து அரியாங்குப்பம் போலீசார், நடராஜனை போலீசார் தேடிவருகின்றனர்.
13-Jun-2025