உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தம்பதியை தாக்கிய சகோதரர்களுக்கு வலை

தம்பதியை தாக்கிய சகோதரர்களுக்கு வலை

பாகூர்: பாகூர் அடுத்த மேல்பரிக்கல்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல்,35; டிரைவர்; இவரது மனைவி கீதாஞ்சலி,27; இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் அருகே குப்பை மேட்டில் விளைந்திருந்த பரங்கிக்காயை பறித்துள்ளார். அதனை, எதிர்வீட்டை சேர்ந்த தனலட்சுமி கண்டிக்கவே இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏறு்பட்டது. ஆபாசமாக பேசிய தனலட்சுமியின் கணவர் பிரத்திவினனை, குமாரவேல் கண்டித்தார். ஆத்திரமடைந்த பிரத்திவினன், தனது சகோதரருடன் சேர்ந்து குமரவேலு மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலியை தாக்கினர். இதில், படுகாயமடைந்த கீதாஞ்சலி அளித்த பகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து பிரத்திவினன், தனஞ்செழியன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ