மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
30-Dec-2024
திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம், அரசு உயர் நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியை லட்சுமிகாந்தம் (எ) சாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். தாகூர் அரசு கலை கல்லுாரியின் தேசிய மாணவர் படை, ஒருங்கிணைப்பாளர் மேஜர் தீபக்உச்சம்பள்ளி சிறப்புரையாற்றி, மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.ஆசிரியர் பாட்சா நோக்க உரையாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிறப்புகள் குறித்து பேச்சுப்போட்டி நடந்தது. மாணவ, மாணவிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும், உரையாற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை லீலாவதி நன்றி கூறினார்.
30-Dec-2024