உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய குற்றவியல் சட்டங்கள் ஆலோசனை கூட்டம்

புதிய குற்றவியல் சட்டங்கள் ஆலோசனை கூட்டம்

அரியாங்குப்பம்: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம், 3 புதிய குற்றவியல் சட்டத்தை (பி.என்.எஸ்) அமல்படுத்தியது. போலீஸ் ஸ்டேஷன்களில் இந்த சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுகிறது என, மத்திய உள்துறை அமைச்சகத்தில், இம்மாதம் கூட்டம் நடக்க உள்ளது.இந்த சட்டங்கள் தொடர்பாக, தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள், பெண்களுக்கு எதிராக வழக்கு, போக்சோ உள்ளிட்ட முக்கிய வழக்குகள் எத்தனை நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை