புதிய மதுபான உரிமம் மா.கம்யூ., கண்டனம்
புதுச்சேரி: புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் அமைச்சரவை முடிவுக்கு மா.கம்யூ., கண்டனம் தெரிவித்துள்ளது.அக்கட்சி மாநில செயலாளர் ராமச்சந்திரன் அறிக்கை;சமீபத்தில் நடந்த அமைச்சரவையில் சிலர் நீண்ட காலமாக மதுபான கடைகள் நடத்தி வருவதால், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கில் புதிய உரிமம் வழங்கலாம் என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மாநில நலனுக்கு எதிரானது. தவறான மது கொள்கையால் சாலை விபத்துக்களும், சமூக குற்றங்களும் அதிக அளவில் நடக்கிறது. விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் என்ற அடிப்படையில், இந்திய அளவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 90 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் முடிவை எதிர்த்து மா.கம்யூ., கட்சி நீதிமன்றம் சென்றபோது, தனி நபர்களுக்கு புதிய உரிமம் வழங்க மாட்டோம் என, அரசு உறுதி அளித்தால் வழக்கு முடித்து வைத்தனர்.நீதிமன்ற வாக்குறுதியை மீறி மாநில நலனுக்கு எதிராக புதிய மதுபான கடை திறக்கும் முடிவு ஏற்புடையது கிடையாது. இளம் தலைமுறையினர் நலன் கருதி மதுகடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.