உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய டிராபிக் சிக்னல்கள்: வல்லுநர் குழு ஆய்வு

புதிய டிராபிக் சிக்னல்கள்: வல்லுநர் குழு ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதிதாக 36 சிக்னல்கள் மற்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள22 சிக்னல்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 17 சிக்னல்கள் பணி முடிந்துள்ளது.பணிகள் முடிக்கப்பட்ட சிக்னல்கள் சரியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா, செயல்படுகிறதா என்பதை சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், பொதுப்பணித்துறை, சிக்னல் அமைத்த நிறுவனம், போக்குவரத்து துறை, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.சோனாம்பாளையம் சந்திப்பு, முதலியார்பேட்டை, எம்.ஏ.எஸ்., சண்முகம் சிலை, புஸ்சி வீதி செஞ்சி சாலை சந்திப்பு, கிருமாம்பாக்கம் ஆகிய 5 சிக்னல்கள் நேற்று இயக்கி சோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ