உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலை., புதிய துணை வேந்தர் பொறுப்பேற்பு

புதுச்சேரி பல்கலை., புதிய துணை வேந்தர் பொறுப்பேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தராக பாணிதி பிரகாஷ் பாபு பொறுப்பேற்று கொண்டார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ைஹதராபாத் பல்கலைக் கழக உயிரிதொழில்நுட்பம் மற்றும் உயிரி தகவலியல் துறை சீனியர் பேராசிரியர் பாணிதி பிரகாஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஐந்தாண்டு காலம் அல்லது 70 வயது வரையில் துணை வேந்தர் பணியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு துணை வேந்தர் தரணிக்கரசு, இயக்குநர்கள், டீன்கள், அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ