ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனையில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுடன், 2026 -புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது. நி கழ்ச்சியில், குழந்தைகள் தீவிர சிகிச்சை தலைமை நிபுணர் திருமுருகன் சேரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் குழந்தைகள் நலத்துறை தலைவர்கள் சீனுவாசன், நளினி, சண்முகநாதன், இந்திரா மற்றும் சினேகா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மருத் துவமனையில் பிறந்த நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், தங்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு விழாவை, மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பின், குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் இளங்கோவன், இணை இயக்குநர் சுமதி, பேராசிரியர்கள் நாச்சியப்பன், மருத்துவ கண்காணிப்பாளர் ஆதி கணேஷ், குழந்தைகள் நல மருத்துவர் முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.