புதுச்சேரியில் புத்தாண்டு நிகழ்ச்சி; போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
புதுச்சேரி; புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வர உள்ளனர். பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தனியார் நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.மக்கள் கூடும் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களை, போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு குறித்து பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலத்தில், போக்குவரத்து உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து, போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த கூட்டத்தில், டி.ஜி.பி., ஷாலினிசிங் உட்பட ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.