செய்தி விளம்பரத்துறை இயக்குனருக்கு ஜாமின்
புதுச்சேரி: புதுச்சேரி, ரெயின்போ நகரில், காமட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. அந்த இடத்தை போலி ஆவணம் தயாரித்து கடந்த 2010ம் ஆண்டு மனைகளாக விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து ஏற்கனவே பதிவாளர் உள்பட 14 பேர் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் உழவர்கரை சப் ரிஜிஸ்டராக இருந்து தற்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனராக உள்ள சுரேஷ்ராஜனை நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இவருக்கு நேற்று கோர்ட்டில் ஜாமின் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.