உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  என்.எம்.கே., வேட்பாளர் விநாயகம் ராஜாஜி நகரில் ஓட்டு சேகரிப்பு

 என்.எம்.கே., வேட்பாளர் விநாயகம் ராஜாஜி நகரில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி, ராஜாஜி நகரில் நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் ஓட்டு சேகரித்தார். நேயம் மக்கள் கழக வேட்பாளரர் விநாயகம் தட்டாஞ்சாவடி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராஜாஜி நகர் பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் விநாயகம் கூறியதாவது: தட்டாஞ்சாவடி தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு வளர்ச்சி இல்லாமல் மிகவும் பின்தங்கி உள்ளது. நான் வெற்றி பெற்றால் சொந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம், சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களுக்காக உழைக்க எனக்கு குக்கர் சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என, கூறினார். ஓட்டு சேகரிப்பின் போது வேட்பாளருடன் த.வெ.க., மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை