உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடமாநில வாலிபர் சாவு

வடமாநில வாலிபர் சாவு

புதுச்சேரி: வடமாநில வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஜார்கண்ட் மாநிலம், சக்ரதப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிடுராம் சமத், 19. இவர் புதுச்சேரி சேதாரப்பட்டில் உள்ள அண்ணன் அசுமண் சமத் வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த இவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. அவரை ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு கிடுராம் சமத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை