மேலும் செய்திகள்
'ஏசி' காப்பர் கம்பி திருடியவர் கைது
16-Feb-2025
புதுச்சேரி: காப்பர் கம்பி திருடிய வழக்கில், வடமாநில நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முள்ளோடை, உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி, 36; உழவர்கரை, வில்லியனுார் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மெடிக்கலில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.மலர்கொடி கடந்த 7ம் தேதி மெடிக்கலில் உள்ள ஏ.சி.,யை ஆன் செய்தபோது, ஓடவில்லை. இதையடுத்து, மெடிக்கல் ஷாப் பின்புறம் சென்று பார்த்தபோது, ஏ.சி.,க்கு வரும் 10 மீட்டர் நீள காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார், அங்குள்ளளசி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் வட மாநில நபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
16-Feb-2025