மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
06-Aug-2025
புதுச்சேரி : ரயில் குட்கா பொருட்களை கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:30 மணியளவில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் புவனேஷ்வரில் இருந்து வந்த ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது ரயில் வந்த வாலிபர்கள் 4 பேர் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாசாகான், 37; சிமாஞ்சல் சேத்தி, 28; சிபாசங்கர் நாயக், 25; நவுகா சிங், 25, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
06-Aug-2025