மேலும் செய்திகள்
கடையை சேதப்படுத்திய இருவருக்கு வலை
16-Sep-2025
நெட்டப்பாக்கம்: மடுகரைக்கு வேலைக்கு வந்த வட மாநில வாலிபர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சான்ட்குமார், 33. இவர், புதுச்சேரி, மடுகரையில் தங்கி, மடுகரை - பட்டாம்பாக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி பணி முடிந்து இரவு அவரது அறைக்கு சென்றார். பின் அங்கிருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கம்பெனி ஒப்பந்ததாரர் அர்ஜூன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Sep-2025