உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையோர குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கல்; வாதானுாரில் மக்கள் சாலை மறியல்

சாலையோர குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கல்; வாதானுாரில் மக்கள் சாலை மறியல்

புதுச்சேரி : வாதானுாரில் சாலையோர குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருக்கனுார் அடுத்த வாதானுார், ஏரிக்கரை சாலை களத்துமேடு தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தற்போது புதிதாக ரைஸ் மில் கட்டடம் கட்டுப்பட்டு வருவதாக தெரிகிறது. அதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.களத்துமேடு தெருவில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் சாலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அந்த வீடுகளை காலிசெய்யும் படி பொதுப்பணித்துறை மூலம் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதைகண்டித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் காலை 11:00 மணியளவில் வாதானுார் - பி.எஸ்.பாளையம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் குடியிருப்புகளை காலி செய்யக்கோரி வழங்கப்பட்ட நோட்டீசை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தொடர்ந்து, அங்கேயே குடியிருக்க ஆவணம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.இதற்கு, போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, வாதானுார் - பி.எஸ்.பாளையம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ