உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  என்.ஆர்.காங்., சிவக்கொழுந்து இறுதிகட்ட பிரசாரம்

 என்.ஆர்.காங்., சிவக்கொழுந்து இறுதிகட்ட பிரசாரம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் வீடு வீடாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று அவர், லாஸ்பேட்டை தொகுதி முழுதும் அனைத்து பகுதிகளிலும் தனது ஆதரவாளர்களுடன் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரம் திரவுபதி அம்மன் கோவிலில் துவங்கி, லாஸ்பேட்டை தொகுதி முழுதும் நடந்தது. அப்போது சிவக்கொழுந்து, முதல்வர் ரங்கசாமி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மேலும் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டார். என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், இளைஞர் அணியினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை