மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
04-May-2025
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி ரோஜா நகரில் உள்ள கோவிலுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி கேசவன் நன்கொடை வழங்கினார்.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரோஜா நகரில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.பின் கோவில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு சிறப்பு மரியாதையை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகத்திடம் நன்கொடை மற்றும் விழாவில் கலந்து கொண்ட 300 பக்தர்களுக்கு சிறப்பு தாம்பூலங்களை டாக்டர் நராயணசாமி தனது சொந்த செலவில் வழங்கினார்.
04-May-2025