மேலும் செய்திகள்
திருப்புவனத்தில் பெங்களூரூ தர்ப்பூசணி விற்பனை
05-Apr-2025
கோடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சீசனில் தர்பூசணி விற்பனை சூடுபிடிப்பது வழக்கம். ஆனால், தர்பூசணி சம்பந்தமாக தமிழகத்தில் பரவிய வீடியோ, தர்பூசணி விற்பனையை பாதிப்படைய செய்தது. இதனால், தர்பூசணியை விளைவித்த விவசாயிகளும் நிலைகுலைந்து போய் விட்டனர்.இதுபோன்ற சூழ்நிலையில், ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயா பேராயலத்தில் நடந்த புனித வெள்ளி சிறப்பு வழிபாட்டில், விவசாயிகளிடம் இருந்து 2,000 தர்பூசணிகளை, உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் வாங்கி, திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கினார். இது, பொதுமக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும், உடலுக்கு ஆரோக்கியம் தரும், வெயிலில் இருந்து மக்களை காக்கும் தர்பூசணியை அனைவரும் வாங்கி சாப்பிடலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
05-Apr-2025