கோர்க்காடு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
புதுச்சேரி: கோர்காடு அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், சுடுமண் சிற்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்கள் செய்வது குறித்து, மாணவர்களுக்கு கைவினை கலைஞர் முனுசாமி பயிற்சி அளித்தார். அதில், பறவைகள், சுவாமி சிலைகள், கடல் வாழ் உயிரினங்கள் என, பல்வேறு வகையான பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.